இலங்கை தொடர்பில் சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி : IMF தலைவர் !

சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.

சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின் ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.

இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். Published from Blogger Prime Android App