மரணத்தின் வணிகர்’ என அழைக்கப்படும் ரஸ்ய ஆயுத முகவர் Viktor Boutம் KP என்ற குமரன் பத்மநாதனும்!

‘மரணத்தின் வணிகர்’ என அழைக்கப்படும் ரஸ்ய ஆயுத முகவர் Viktor Boutம் KP என்ற குமரன் பத்மநாதனும்!

மிகப்பெரிய ஆயுத வியாபாரியும், ரஸ்ய பிரஜையுமான Viktor Anatolyevich Bout என்ற Viktor Bout ஐ கைதிகள் பரிமாற்றத்தின் ஊடாக ரஸ்யா மீட்டிருக்கிறது. 

Merchant of Death, Sanctions Buster, Vadim Markovich Aminov
Viktor Bulakin,, Viktor Budd, Boris என்ற Viktor Bout முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ மொழிபெயர்ப்பாளர்.

 சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் உலக அளவில் ஒரு தொழிலதிபராக உருவெடுத்தார். 

1990களில் இருந்து 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்த்தான் பகுதிகளுக்கு ஆயுதங்களை கடத்துவதற்கு தனது நிறுவனங்களைப் பயன்படுத்தியவர்.

இஸலாமிய ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட உலகின் பிரபலமான தீவிரவாத – பயங்கரவாத இயக்கங்கள், குழுக்களுக்கு Viktor Bout ஆயுதங்களை விற்பனை செய்துவந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இன்றபோலின் சிகப்பு எச்சரிக்கைக்கு உள்ளாகி இருந்தார்.

அதனால் பயங்கரவாதக் குற்றச்சாட்டிற்கு உள்ளான Viktor Bout ஐ, 2008 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 6 ஆம் திகதி, அமெரிக்காவின் sting operation ஊடாக, தாய்லாந்தின் றோயல் தாய் பொலிஸ் கைது செய்தது.

தாய்லாந்தில் சிறைவைக்கப்பட்ட Viktor Bout அமெரிக்க தாய்லாந்து நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் 2010 ஓகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையான FARCக்கை பிரதிநிதித்துவப்படுத்துவது போல் பாசாங்கு செய்த அமெரிக்க தகவல் வழங்குனருக்கு (இன்போமருக்கு) ஆயுதங்களை விற்க எண்ணியதாக Viktor Bout குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த நிலையில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அதிகாரிகளைக் கொல்ல சதி செய்தமை, விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விநியோகித்தமை, பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக, Viktor Bout ற்கு மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றம், 2011 நவம்பர் 2ஆம் திகதி - 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 

தாய்லாந்தில் 2 வருடங்களும், அமெரிக்காவில் 12 வருடங்களும் சிறை வைக்கப்பட்ட Viktor Bout பெப்ரவரி 2022 இல் மொஸ்கோவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க கூடைப்பந்து வீரர் பிரிட்னி க்ரைனரை விடுவிப்பதற்கான கைதிகள் பரிமாற்றத்தில் விடுதலைசெய்யப்பட்டு ரஸ்யாவுக்கு திரும்பியுள்ளார்.

இந்த Viktor Bout உடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதக் கொள்வனவு – மற்றும் கடத்தலுக்கு பொறுப்பாக இருந்தவருமான, குமரன் பத்மநாதன் அல்லது KP என்ற செல்வராஜா பத்மநாதன் தொடர்புபட்டிருந்தார் அல்லது அவரை சந்திக்க முனைந்தார் எனவும், தாய்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  

குறிப்பாக 2001 மே 19ல் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கராச்சி வழியாக காபூலுக்கு பணயம் செய்த கே.பி என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் ரஸ்ய அயுத முகவரான Viktor Bout நடாத்தும் 'ஷார்ஜா நெட்வொர்க்' அமைப்பு பற்றி அறிவதற்காகவும், Viktor Bout உடன் தொடர்பை எடுப்பதற்காகவும் தலிபான் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து 2009 ஓகஸ்ட் 5 திகதி மலேசியாவில் கைதான காலப்பகுதியில் இலங்கையின் இராஜதந்திரிகளில் ஒருவரான Shanaka Jayasekaraவை மேற்கோள் காட்டி இலங்கையின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை நினைவில் வருகிறது.
Published from Blogger Prime Android App
Published from Blogger Prime Android App