100 மில்லியன் இழப்பீட்டை செலுத்துவதற்கான பணம் என்னிடம் இல்லை : மைத்திரிபால சிறிசேன!

நீதிமன்றம் உத்தரவளித்துள்ளபடி உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு செலுத்துவதற்கான 100 மில்லியன் தன்னிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தெரிவித்தபடி இழப்பீட்டை செலுத்துவதற்கான தனது நெருங்கிய நண்பர்களிடமிருந்து பணத்தை பெறப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

100 மில்லியனை செலுத்துவதற்கான சொத்தோ பணமோ தன்னிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நான் சட்டத்தை மதிக்கின்றேன் நான் எப்போதும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளிற்கு அடிபணிபவன் என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன என்னிடம் அவ்வாறான பெரும் இழப்பீட்டை செலுத்துவதற்கான பணம் இல்லை நான் எனது நண்பர்களிடமிருந்து பெறுவதற்கு தீர்மானித்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒவ்வொருவருடமும் எனது சொத்துக்கள் குறித்த மதிப்பை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளேன் யாரும் அதனை பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App