மட்டக்களப்பு ஊறணி சந்தியில் பஸ் பனை மரத்துடன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்!!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறீ வீதியை விட்டு விலகி பனை மரத்துன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தை மேற்கொண்ட பஸ்வண்டி அதிகாலை 5.30 மணிக்கு மட்டு ஊறணி சந்திக்கு அருகில் ஆவகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது

இதில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Published from Blogger Prime Android App