2021ஆம் ஆண்டு கலால் வரி வருமானம் 140 பில்லியன் ரூபாவாகவும், கடந்த வருடம் 170 பில்லியன் ரூபா வரை அதிகரித்தாக மதுவரித் திணைக்களத்தின் வருமான செயற்பாட்டுப் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் நாடுமுழுவதும் உள்ள 45 முதல் 50 சதவீமான மதுபான விற்பனை நிலையங்கள் வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்துள்ளன. தற்போது கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாரிய சவாலுக்கு முகம் கொடுத்துள்ளளோம்.
எவ்வாறாயினும், திறைச்சேரிக்கு உரிய முறையில் குறித்த வரியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களத்தின் வருமான செயற்பாட்டுப் பிரிவின் மேலதிக மதுவரித் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
