அடுத்த ஆண்டு அரசு நிறுவனங்களில் கொண்டாட்டங்கள் நடத்த முடியாது : நிதி அமைச்சு !

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு நிறுவனங்கள் செலவு செய்வதை நிறுத்தும் உத்தரவு அடுத்த ஆண்டு வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் ஒதுக்கப்படும் நிதி வரம்புகள் அடுத்த வருடத்திற்கு மிகையாகாத வகையில் செலவுகளை நிர்வகிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App