அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட வாகனத்தை மாத்திரமே பயணத்திற்கு பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App