ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா

கல்விப் பணியில் 33 மூன்று வருடங்களைக் கடந்து ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது

கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் ஏற்பாட்டில் கல்முனை கல்வி வலய தமிழ்பாட வளவாளர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் நிகழ்வு இன்று இடம்பெற்றது

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.பின்னர் தேசிய கீதம் தமிழ் வாழத்து பாடல் பாடப்பட்டது.தொடர்ந்து வரவேற்புரை வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. பின்னர் அதிதிகளின் உரைநூல் வெளியீட்டு வைபவம் மாணவர்களின் கலை நிகழ்வுகள் என தொடர்ச்சியாக இடம்பெற்றன

ஓய்வு பெற்றுச் செல்லும் உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி பிர்தௌஸின் பல்துறை ஆளுமைகளை உள்ளடக்கிய "தீரா ஆசிரியம்" நூலொன்றும் வெளியிடப்பட்டது

முதன்மை அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட பேராசிரியர் எம்.எம் பாஸில் மற்றும் ஊவா வெல்லச பல்கழைக்கழக பதிவாளர் எம்.எப் ஹிபத்துல் கரீமும் கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை .ஹபீபுல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு கல்வியில் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் சத்தார்.எம்.சதாத் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
Published from Blogger Prime Android App