சமூக ஊடகங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், அக்கட்சி மக்களின் இதயங்களில் நிலைத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் கட்சி என்ற வகையில் நாம் வெற்றியீட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.இந்த நாட்டின் அறிவார்ந்த மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.