சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை : விவசாய அமைச்சு !

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனூடாக, இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறித்த டீசல் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App