இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலையின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படவுள்ளது : மின்சார சபை!

திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது

அந்தவகையில் இன்று அல்லது நாளை இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மின்துண்டிப்பு காலத்தை குறைப்பதற்கான தீர்மானங்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App