மட்டக்களப்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட மூன்று அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியது!

2023 உள்ளூர் ஆட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நேற்றுமுன்தினம் (14) மூன்று அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தி உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரும் சபைகளின் தெரிவத்தாட்சி அலுவருமான எம். பி. எம் சுபியான் தெரிவித்தார்.

இதன்படி இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி நகர சபைகள் மற்றும் ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று மேற்கு கோரளைப்பற்று வடக்கு மண்முனைப் பற்று பிரதேச சபைகளுக்குமாக எட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு கட்சியின் முகவரும் முன்னாள் அமைச்சருமான அலி சாஹிர் மவ்லானா தலைமையில் கட்டுப்பணம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது .

இதேவேளை மௌலவி முபாரக் தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் ஏறாவூர்நகர சபையில் போட்டியிடுவதற்கு கட்டுப்ணத்ததை இன்று செலுத்தியது. இதேவேளை ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியும் மட்டக்களப்பு மாநகர சபை ,காத்தான்குடி நகர சபை மண்முணைப் பிரதேச சபை என்பவற்றிற்கும் கட்டுப்பணத்தினை செலுத்திய உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகஉதவி ஆணையாளர் எம். பி. எம்.சுபியான் தெரிவித்தார்.

இதேவேளை இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிகளும் நாலு சுயேச்சை குழுக்களும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளது இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி .ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், ஐக்கிய காங்கிரஸ் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என்பனவும் கட் டுப்பணம்செலுத்தி இருப்பதாக உதவி தேர்தல் ஆணையாளரும் உள்ளூ ராட்சி சபைகளின் தெரிவாத்தாட்சி அலுவலருமான எம்.பி .எப் சுபி யான் தமது தகவலில் மேலும் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App