உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய தேர்தலில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மொட்டு கட்சி நேற்று (வியாழக்கிழமை) செலுத்தியுள்ளது.

மொட்டு கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரான முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையிலே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சாகர காரியவசம், சனத் நிஷாந்த உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App