அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் : தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் வேட்பாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடனேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 Published from Blogger Prime Android App