அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்கள் நியமனம்!

21 ஆவது அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பிரதாப் ராமனுஜம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் கலாநிதி வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோரே அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களாவர்.

சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு சபை செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன், தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்.
Published from Blogger Prime Android App