ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்!

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
Published from Blogger Prime Android App