தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு !

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.Published from Blogger Prime Android App