தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தமிழ் தேசிய பொங்கல் விழா !

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தமிழ் தேசிய பொங்கல் விழா கிரானில் நடைபெற்றது.

வட்டாரக்கிளைத் தலைவர் எஸ்.சன்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா,மாநகர முதல்வர் தி;.சரவணபவன்,வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன் என முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகம் ஆசியுரை நிகழ்த்தினார்.கிரானைச் சேர்ந்த 1977 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழரசு கட்சிக்கு தொண்டாற்றிய கூட்டணி அப்பா என்று அழைக்கப்பட்ட அமரர் பாக்கியராசா அவர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

'பூத்தது தமிழ் புத்தாண்டு புதுமைகள் பொலிகமாதோ 'என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.இவ் கவியரங்கத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசி;கம் தலைமை வகித்தார்.கதிரவன் பட்டிமன்ற குழுவினரால் பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது.பட்டி மன்றக் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் இறுதியில் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் படிவம் வழங்கப்பட்டு புதிய அங்கத்துவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந் நிகழ்வானது எதிர்வரும் 2023.03.09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான கட்சியின் சார்பில் வாழைச்சேனை பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை கௌரவித்து மக்கள் முன் அறிமுகப்படுத்தும் பிரச்சார கூட்டமாகவும் அமைந்திருந்தது.Published from Blogger Prime Android App