தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் இந்த வாரம் அமுலுக்கு வருகின்றது!

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பாண்மை வாக்கோடு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் இந்த வாரம் குறித்த சட்டமூலம் தனக்கு கிடைக்கும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் என்ற ரீதியில் தான் கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தியதன் பின்னர் அமுலுக்கு வரும் என்றும் கூறினார்.Published from Blogger Prime Android App