இலங்கையில் கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை : கெஹெலிய ரம்புக்வெல!

இலங்கையின் கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிய நிலையில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் அல்லது மாற்றம் குறித்து சுகாதார அமைச்சு அல்லது ஜனாதிபதி ஊடக பிரிவினால் விடுக்கப்படும் செய்திகளே உண்மையானது என்றும் கூறியுள்ளார்.Published from Blogger Prime Android App