நாட்டுக்கு தேர்தல் அவசியம் இல்லை ; முன்னாள் அமைச்சர் தயாகமகே !

இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலையில் நாட்டுக்கு தேர்தல் அவசியமில்லை.

இவ்வாறு அம்பாறை கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வருகையில் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான தயாகமகே தெரிவித்தார் .

மேலும் அவர் கூறுகையில்.
நாம் 19 சபைகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.

எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனவரி முதலாம் தேதி வந்த பொழுது மக்கள் பால் சோறு உண்டார்கள். இன்று தேர்தலை நோக்கி செல்கின்ற ஒரு ஜனநாயக சூழலை அவர் உருவாக்கி இருக்கின்றார்.

பாராளுமன்றத்திலே 225 உறுப்பினர்களில் ஒரே ஒரு உறுப்பினராக தெரிவாகி அவர் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

3/2 பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு ஆட்சி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்த வேளையிலே மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். விளைவாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

ஆனால் தனிஒரு மனிதனாக ரணில் விக்கிரமசிங்க இறங்கி இன்று மக்கள் ஓரளவு வாழ்க்கையை சுகமாக கொண்டுசெல்வதற்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றார் .எனவே அவருக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று நாட்டின் நிலைமையில் தேர்தல் ஒன்று அவசியமில்லை. ஆனால் ஜேவிபி ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இரண்டு கட்சிகளும் இந்த நாட்டை மேலும் ஆதலபாதாலத்துக்கு கொண்டு செல்வதற்காக திட்டமிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றது.

வெளிநாடுகளில் இப்படி நாடு சிக்கலில் சிக்கியிருக்கின்ற பொழுது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துசேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவார்கள் .ஆனால் இங்கு மேலும் மோசமாக்குவதற்காக இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் வேண்டும் என்று போராடுகிறார்கள்.

வெளிநாடுகளுக்கு இங்கு பிரச்சனை இருக்கின்றது என்று காட்ட வேண்டும். நாடு வங்குரோத்து நிலையில் இருக்கின்றது என்று காட்டி வெளிநாட்டு உதவிகளை மறுப்பதற்கும் அவர்கள் போராடுகின்றார்கள். இது ஒன்றுமே செய்யமுடியாது. அதில் விக்ரமசிங்க என்கின்ற தலைவன் ஒருவனால் மட்டுமே இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியும்.என்றார்
Published from Blogger Prime Android App