ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.​

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நமது பணி நேரம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை. நமது பணிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை. உங்கள் அனைவரின் ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதுடன் இந்நாட்டை முன்னேக்கி கொண்டு செல்லவும் எதிர்ப்பார்த்துள்ளேன்எனவும் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App