உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும் : தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியாகாத வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டு நடத்தப்படும் என தேசியத் தேர்தலுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App