பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!பாடசாலையில் ஆசிரியர் பயிற்சியில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கான கவஈர்ப்புப் போராட்டம் இன்று(09) இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.இப்போராட்டத்தில் வடக்கு,கிழக்கு மற்றும் தென்பகுதியைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.இறுதியில் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த உடனான சந்திப்பும் இடம்பெற்றமை குறிப்பபிடத்தக்கது.