கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு !

2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி போராட்டத்தின் போது கோட்டை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொடர்பில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை அன்றைய தினமே பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.Published from Blogger Prime Android App