உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படாது – மஹிந்த அமரவீர

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட மாட்டாது என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தெரிந்தவரை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படாது என கூற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை குறித்து வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவருடன் தங்களுக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை எனவும் விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்Published from Blogger Prime Android App