வாழைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் கைது!

இந்த செய்தியை பகிருங்கள்!


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறந்துரைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரைக் கைது செய்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து, சம்பவ தினமான நேற்று இரவு குறித்த வியாபாரியை பின் தொடர்ந்த வேளையில், சந்தேகநபர் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற போது சுற்றி வளைத்த நிலையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த வியாபாரி நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..