கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஆணொருவரும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக இறந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 588 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்து நாட்டில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 537 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 42 ஆயிரத்து 621 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு, 6 ஆயிரத்து 672 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 793 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..