அம்பாறை செய்திகள்

சமுகசேவை செய்யும் இளைஞர்களுக்கு வாக்களிக்க மக்கள் முன்வரவேண்டும்!

காரைதீவு நிருபர் சகா)

‘ மக்களை அடிமையாக்கி ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் மக்களுடைய வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை விட சமூக சேவை செய்ய முன்னிற்கும் இளைஞர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் ‘.

இவ்வாறு த.தே. கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் டாக்டர் இரா.சயனொளிபவன் என மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் இரா.சயனொளிபவனுடைய மக்கள் சந்திப்பு நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்களின் அமோக ஆதரவுடன் நேற்று மாலை இடம்பெற்றது .

இதன் போது இக் கூட்டத்தில் அப்பிரதேசத்தின் இளைஞர்கள் பெண்கள்இ பெரியோர்கள் தாய்மார்கள் மற்றும் சமூக நல சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .

அவர் மேலும் பேசுகையில்:
அயல் சமூகத்திடம் கையேந்தி நிற்கும் சமூகமாக இன்னும் பின்னிற்காமல் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் தனது அரசியல் பயணத்தில் கைகோர்க்குமாறு கேட்டுக்கொண்டார் .

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் ஏற்கனவே பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட உறுப்பினர்களால் எதுவும் பயனடையவில்லை என்று தங்கள் அதிருப்தியை வெளியிட்டு அவர்களுக்கு தக்க பாடம் இம்முறை தேர்தலில் அளிப்பதாகவும் தெரிவித்தார்கள் .

அத்துடன் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞன் மற்றும் சமூக சேவையாளன் இரா.சயனொளிபவனுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் உறுதி அளித்தனர் .

Related Posts