செய்திகள்

மட்டக்களப்பில் முன்னாள் அரச அதிபர் உதயகுமாரின் வெற்றி நிச்சயம்!

தமிழ்தேசியகூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக பொட்டியிடும் முன்னாள் அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார் இன்று 30/06/2020, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா அவர்களுடைய இல்லத்தில் சென்று நேரடியாக ஆசியை பெறலறதுடன் அவரின் ஆலோசனைகளையும் பெற்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களில் நீங்கள் கட்டாயம் தெரிவாகுவீர்கள் அதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை உங்கள் வெற்றிக்கு முற்கூட்டியே எனது வாழ்த்துக்கள் என கூறினார்.
இதன்போது மேலும் கருத்துகூறுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை கூடுதலாக வாக்களிப்பதற்கான ஆயத்தங்களை செய்வதன்மூலம் இம்முறை நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பில் பெறமுடியும் அந்த நால்வரில் நீங்கள் கட்டாயம் வெற்றிபெறவது உறுதி எனவும் மேலும் கூறினார்.

Related Posts