செய்திகள்

மாணவர்களின் நலன் கருதி உடல் வெப்பநிலையை அளவிடும் கருவி வழங்கி வைக்கும் நிகழ்வு

ருத்ரா.

மட்டக்களப்பு 306 சி2 லயன்ஸ் கழகத்தினரினால் கல்குடா வலய மாணவர்களின் நலன் கருதி உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் மேற்படி கழகத்தின் 2020, 2021 ஆம் ஆண்டிற்கான தலைவர் கே.லோகேந்திரன் (அதக) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 306 சி2 வலய ஆளுநர் வெனட்கம்ளத்(pmjf) மட்டக்களப்பு லயன்ஸ் கழகத் தலைவர் வி.ஆர்.மகேந்திரன்,லயன் செல்வேந்திரன், லயன் திருமதி கலாநிதி பாரதி கெனடி ஆகியோர்கள் அதிகளாக கலந்து கொண்டனர்.

லயன் கே.லோகேந்திரனிடம் பாடசாலை நிர்வாகம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து வாழைச்சேனை இந்துக்கல்லூரி,செங்கலடி மத்திய கல்லூரி,புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம் மற்றும் விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயம் போன்றவற்றுக்கு இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Related Posts