செய்திகள் புலனாய்வுச் செய்திகள்

தேரருடன் ஊடகவியலாளரின் மகள் காட்டி கொடுக்கும் ஊடகவியலாளர் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள புலனாய்வு துறையுடன் இணைந்து அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப் படுத்த சில ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்து இறக்கி விட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் என்ற போர்வையில் செயற்படும் ஒரு ஊடகவியலாளர் தனது மகளை தேரருடன் தேர்தல் கேட்பதற்கு அனுப்பியுள்ளார்.

சரவணன் என்ற ஊடகவியலாளர் தனது மகளான அபிசாளினியை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரருடன் அவரது கட்சியில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் தமிழ் தேசியத்தை காட்டிக்கொடுத்து வருவது இதற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனவே மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள், தமிழ் உணர்வார்கள் இவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இவர்களுக்கு இலங்கை புலனாய்வு துறையால் கொடுக்கப்பட்ட பணி தமிழ் தேசியத்திற்காக செயற்படும் தமிழ் உணர்வார்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், காணாமல் போனோர் அமைப்பை சேர்ந்தவர்கள் என அனைவரையும் கண்காணித்து புலனாய்வு துறைக்கு காட்டி கொடுப்பதே.

அந்த வகையில் ஏற்கனவே அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் என்ற போர்வையில் செயற்பட்ட சரவணன் என்ற ஊடகவியலாளர் தற்போது மட்டக்களப்பிற்கு புலனாய்வு துறையால் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்திற்காக செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்படும் தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவற்றை காட்டிக்கொடுத்து சிங்களத்தின் கை கூலியாக செயற்பட்டு வருகிறார்.

இவர் தான் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வவுணதீவு பொலீஸ் காவலரன் மீது ஷகரான் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னாள் போராளிகள் தான் செய்தார்கள் என்று கூறி அம்பாறையில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்களை மட்டக்களப்பிற்கு கூட்டி வந்து சிங்கள பத்திரிகைகளில் இனவாதத்தை தூண்டி முன்னாள் போராளான அஜந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க காரணமாக இருந்தவர்.

இதைவிட மட்டக்களப்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் தமிழ் உணர்வுடன் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக பல பொய்யான குற்றச்சாட்டுக்களை அனுப்பி அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை விசாரணை நடத்த காரணமாக இருந்தவர். அத்துடன் மட்டக்களப்பில் தமிழ் தேசிய உணர்வுடன் செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக செய்திகளை வெளிக்கொண்டுவரும் ஊடகசங்கங்களை இலக்கு வைத்து அவர்களது செயற்பாடுகளை முடக்கும் வகையில் காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவரும் இவருடன் சேர்ந்த சில அரச அதிகாரிகள் தற்போது மட்டக்களப்பில் உள்ள தமிழ் உணர்வுடன் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடக சங்கம், மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக புதிய ஊடக சங்கங்களை உருவாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடக செயற்பாடுகளை குழப்பி வருகின்றனர்.
அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் இவரும் இவருடன் சேர்ந்து இயங்கும் ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவர் போன்றவர்களின் காட்டிக் கொடுப்பால்தான் கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.

Related Posts