செய்திகள் முக்கிய செய்திகள்

பிள்ளையானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரே நாளில் ஆப்பு வைத்த தாய்மார் !

வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் தமது உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் இன்று (27) செங்கல்லடி சந்தியில் நடைபெறவிருந்த நிலையில், நீதிமன்ற கட்டளையை பெற்று போராட்டத்தை பொலிசார் தடை செய்துள்ளனர்.

கோவிட் 19 நடைமுறைக்கு அமைய போலீசாரின் அனுமதியும் பெற்று, 100 பேருக்கும் குறைவானவர்கள் என்ற போலீசாரின் நிபந்தனைக்கு ஏற்பவே போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலும் கருணா மாற்றும் பிள்ளையான் குழுவினரால் பாதிக்கப்பட்ட தாய்மாரும் உறவுகளுமே கூடி தமது ஆதங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். எனினும், போராட்டம் தொடங்கியதும், பொலிசார் நீதிமன்ற கட்டளையுடன் வந்து போராட்டத்தை தடைசெய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான நிலைமை உருவாகியது.

பிள்ளைகளை தேடியும் போராட்டம் நடத்த அனுமதியில்லையா, தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதை அனுமதிக்கும் அரசு, எமது மனிதாபிமான பிரச்சனையை மூடிமறைக்க முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினர்.

அத்துடன், கருணா மற்றும் பிள்ளையான் அணியினர் தேர்தல் பிரச்சார மேடைகளில் நையாண்டி செய்து பேசி வருவதாகவும், தமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை தெரிவித்து விட்டு, மேடையில் ஏறுங்கள் என்றும் வலியுறுத்தினர்.

ஏற்பாட்டாளர்களையும் வரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகி, தமது தரப்பு விளக்கத்தை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts