செய்திகள்

பாடசாலை மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் அரச பாடசாலைகள் மற்றும் அரசுடன் இணைந்த தனியார் நிறுவனங்களை சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் பல கட்டங்களில் மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஜூலை 27 முதல் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கு அரசுப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஜூலை 31 வெள்ளிக்கிழமை வரை தொடர அனுமதிக்கப்பட்டன.

இருப்பினும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி முதல் நடைபெறும் பொதுத் தேர்தல் காரணமாக ஆகஸ்ட் 04 – 07 முதல் மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

01- 13 ஆம் வகுப்புகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் அரசு பாடசாலை மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts