செய்திகள்

சிக்கி கிடக்கும் எமது இனத்திற்கு சிறகு விரிக்கும் புதிய அரசியல பாதை

பன்னெடும் காலமாக பல்வேறுபட்ட மாயைகளுக்குள்ளும் பறிபோன அரசியல் உரிமைகளுக்குள்ளும் வித்தைகாட்டும் அரசியல் விம்பங்களுக்குள்ளும் விரும்பியோ, விரும்பாமலோ சிக்குண்டுள்ள அறிவுக்கூர்மையும், ஆற்றலுமுள்ள எமது இன மட்டக்களப்பு மாவட்ட வாழ் சொந்தங்கள், உறவுகள் எதிர்கால இளையோர்கள்யாபேரும் இன்றய இந்த சூளலில் எண்ணங்களினூடே இல்லாது சற்று சிந்தனை திறவுகோலை நிலை நிறுத்திசிந்தித்து உண்மைகளுக்கு உருக்கொடுக்க வேண்டியவர்களாக , கடமையுள்ளவர்களாக ஆக வேண்டியநிலமைக்குள் உள்ளாக்கப் பட்டுள்ளோம்.

கடந்த கால எமது இன பல்கோண அரசியல் தலமைகளும், அரசியலாளர்களும், புதிய புறம் படைக்கஉருவெடுத்த முதிர்ச்சியாளர்களையும் உற்று நோக்க வேண்டிதருணம் எமது கண்களுக்குள்ளும், மனச்சிந்தனைகளுக்குள்ளும் ஆழ்ந்து கிடக்கின்றது. கடந்தவைகளை திரும்பி பார்த்தல் அவசியம் . ஆனால்அவைகளுக்குள் உண்மைகளையும் ஆராய்தல் என்பது சிறந்த பரம்பரையை எம்முள் தோற்றுவிக்கும். இதேபார்வையும் , எண்ண ஓட்டமும் ஒரு தேடலின் அல்லது ஆராய்வின் பயணப் பாதைக்குள் நுளைந்தது.

இப்போதய அரசியல் தேர்தல் களத்தினை சற்று கண்ணுற்று கொள்ள வேணகடிய தேவையும் ,அதன் அவசியமும்குறிப்பாக மட்டக்களப்பு வாழ் உறவுகளுக்கு அதிகமுண்டு . வேட்பாளர்கள் ஒரே கட்சி சார்ந்திருந்தும்ஒவ்வொருத்தரும் குரோதப் போக்கில் செயற்படும் தன்மை மேலெழுந்து கோலம் போடுகின்றது. இந்தபோக்கிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுள் தமிழரசி கட்சி சார்பில்சாணக்கியனும்  இந்த 2020 க்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எமது இனத்திற்கானஉரிமைகளை பெறவும், மக்கள் நலம் சார்ந்த பன்முக பணிகளை செய்யவும் பிரச்சார களப்பணிகளில் தன்னைஈடுபடுத்தியுள்ளார்.

இதனுள் கடந்த காலத்தில் நடந்து கடந்து போனவைகளை மக்களுக்கு புதிய போர்வையினை போர்த்து தங்கள்வெதும்பல்களை வெளிச்சம் போடுகின்றனர். இங்கு அரசியலாளர்கள் என தங்களை ஆக்கிக் கொண்டவர்கள்தான் இப்போக்கினை கொண்டுள்ளனர் என்பதனை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒருவிடயத்தினை அறிவு சார்ந்து கொள்ளுதல் வேண்டும். சாணக்கியன் தமிழன் அல்ல , கடந்த காலத்தில் சிங்களஅரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்  தமிழ் மக்கள் நலன் சார்ந்து எதனையும் செய்ய மாட்டார்  இன்னும்ஏதேனும் இருக்குமாயின் அவைகளை எல்லாம் போட்டுக் கொள்ளலாம்..

இப்படி பறையடிக்கும் ஒவ்வொருத்தரும் தங்களின் வன்போக்கினையும், பலவீனத்தினையும் வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்களே தவிர  தாங்கள் எடுத்துக் கொண்ட பாதை வழி பயணத்தினை மேற்கொள்ளாதவர்களாகவே இருப்பார்.  சாணக்கியன் வெளிநாட்டு வாழ்வினை  விட்டு மக்களுக்கு தனதுசேவையினையும், பணிகளையும் செய்வதற்காகவே தன் இள வயதில் அதற்குரிய பக்குவத்துடனும், துடிப்புடனும்அரசியல் களம் நோக்கிய பாதையில் பல வருடங்களுக்கு முன் காலடி எடுத்து வைத்தார். அதற்கு சரியானபாதையாக தமிழரசி கட்சி ஊடாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் பணிகளை செய்ய உட் பிரவேசம்செய்தார் . அந்த வேளையில் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை தேவை ஏற்படின்…….) கட்சி சார்ந்த முற்போக்குசிந்தனையற்ற சிலரால் கடும் போக்கான அறிவுறுத்தல்களினால் ஓரம் கட்டப்பட்டார். இதன் விளைவேதுடிப்பான இள வயதினையும், உத்வேகத்தினையும் கொண்டிருந்த இளைஞன் சாணக்கியனை சிங்கள அரசியல்கட்சியின் பக்கம் சாய வைத்தது .

அது சாணக்கியணுக்கு தோல்வியையும், ஏமாற்றத்தினையும் கொடுத்திருந்தாலும் மாறாக மிக உயர்ந்த, பெறுமதி மிக்க படிப்பினையே கற்றுக் கொடுத்தது. சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் தமிழ் மக்களின்நிலைப்பாடு , பூகோள வடிவிலான எண்ணப்பாடு இன்னும் பலவற்றை பணம் கொடுக்காமலே கற்று,அறிந்துகொண்டார் என்பதனை எமது மக்கள் யாரறிவர்.

இதுவே உண்மையுமாகும். தவறுகள், பிழைகள் இல்லாமல் ஏதேனும், ஒன்றை செய்பவர், பாதையினூடேபயணிப்பவர் சில வேளைகளில் மேலெழுந்த நம்பிக்கை தவறு அல்லது பிழையினை ஏற்படுத்தி விடும். ஆனால்தவறுகளை அல்லது பிழைகளை ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட ஒருவர் எதிர்காலத்தில் எத் தவறு, பிழைகளை விடமாட்டார்கள் என்பது நியதியுமாகும். பட்டு திருந்தியவன் என்ற நாமம் இருக்கும்.  அப்படியேசாணக்கியனும் ஆவார். ஆனாலும் ஒன்று சாணக்கியனை ஓரம் கட்டியதால் ஏற்பட்டது என்பதனை மறுத்து விடமுடியாது.

இதுதான் நியாயமான உண்மை. மட்டக்களப்பு மண் குறிப்பாக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும்விலையினைக் கொடுத்து வியாபித்து நிற்கின்றது அது போராளிகளின் தியாகம்,  விடுதலைப் பாதையில் அதோடுஒன்றித்திருந்த மக்களின் தியாகம், பொருளாதார அழிவு, விசமிகளின், காட்டிக்கொடுப்பாளரின் திட்டமிட்ட  கலாச்சார சீரளிவு, நில அபகரிப்பும், சொரண்டலும் இன்னும் பல இவைகளை எல்லாம் இதே மாவட்டத்தினைச்சேர்ந்த தாய்க்குல தமிழ் இளையோர்கள் அறிந்திருப்பார்களா? , அறிந்திருப்பதன் அவசியத்தைபுரிந்திருப்பார்களா?  இனிமேலாவது கண்ணுற்றுக் கொள்வது எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம். தமிழரின் உரிமை என்பது பல்வேறு திரிவுகளுக்குள் அகப்பட்டு நசிக்கப்பட்டது. 1987 இல்  சிங்கள வல்லாதிக்ஆட்சியாளர் இருந்த   ஜே, ஆர் ஜெயவர்த்தனா என்பவருக்கம் இந்திய பிரதமராக இருந்த ராஜிவ்காந்திக்கும்  இடையில் ஏற்படுத்திக் கொண்ட தமிழர் தாயகமான வடகிழக்கு தமிழ் மக்களை இன அழிப்பு ஒப்பந்தத்தின்பயனாக இந்திய இராணுவம் என்பதை விட இந்திய கொலைக் கொடியர்கள் வடகிழக்கில்          கொடூரகொலை தாண்டவத்தினை அரங்கேற்றினர். இதில் ஒரு அங்கந்தான்

பட்டிருப்புத் தொகுதில் எங்களது பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த தமிழ் கிராமங்களை சிங்கள அரசுகுடியேற்றம் என்ற நில அபகரிப்புகளை எதிர்த்து, தடுத்து பல கிராமங்களை காற்பாற்றிய பெருமைக்கும், மதிப்புக்கும் உரிய போற்றப்பட வேண்டிய தமிழரசி கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் ஸ்த்தாபகர் அமரர்இராசமாணிக்கம் அவர்களின் குடும்பம் களுவாஞ்சிகுடியில் அரங்கேற்றிய அந்த இந்திய இராணுவத்தில்கொலைத் தாண்வத்தினுள் அகப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சுட்டுக்கொண்டனர் இதில்சாணக்கினின் சகோதரியும் அடங்கலாக இது இப்போதய தமிழ் தலைமுறையிலே எத்தனை பேருக்கு தெரியும். அதன் பிறகு சிறிலங்காவின் தலை நகருக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தனர் அதன்போதுதான் சாணக்கியன்கொழும்பிலே பிறந்தார்.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மொழி, இனம் கடந்துஇதய சுத்தியுடன் எமது இன விடுதலையின் பால் ஈர்க்கப்பட்ட எவரையும் தலைவர் பிரபாகரன்உதறித்தள்ளியதில்லை இது இளையோர்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கத்தில் முதுநிலை பொறுப்பு வகித்தவர்களில் தமிழீழ  அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன்அவர்களின் மனைவி சிங்கள பெண்மணி அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவிவெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளை இன பெண்மணி இவர்கள் மொழி கடந்து தமிழீழ விடுதலை பயணத்தில்பங்குகொண்டு பயணிக்கவில்லையா?

அதே போன்றுதான் சாணக்கியனின் தந்தை இராசமாணிக்கத்தின் மகன்,  தாய் சிங்கள இனத்தைசேர்ந்திருந்தாலும் இன மானத்தின் குலத்திற்குள் நின்றவள்.  எனவே பகுத்தறிந்து கொள்ளுதல்ஒவ்வொருத்தரின் கடப்பாடாகும். யார் எதனை எண்ணங்களில்  கறைகொண்டாலும் உண்மையின்நிதர்சனங்களை உற்று நோக்குதல் சிறந்த அறிவுக்கூர்மையை மேன்மைப் படுத்தும். முழுமை பெற்ற அரசியல்வாதிகள் என்றும் எவருமில்லை. கால ஓட்டம் ஒவ்வொருத்தரையும் வகைப்படுத்தும்.

இதற்குள்தான் சாணக்கியனின் அரசியல் ஓட்டமும் அமைந்துள்ளது. கண்களை மூடிக்கொண்டு இருளைதேடுவதனை விட்டு திறந்த கண்ணுடன் இருளை அகற்ற வேண்டும்  இது மனித பண்பும் ஆகும்.

தட்டி கொடுக்க வேண்டும் ஆனால் தட்டி கெடுத்தல்  குரோதமாகும். அவ்வாறே சாணக்கியனின் அரசியல்பிரவேசத்திற்குள் நடந்தேறியது. இது சில நயவஞ்சகத்தின் வெளிப்பாடாகவும் அமைந்ததனை நாங்கள்அவதானித்தல் ஆரோக்கியமானதாகும். “திருந்தி விடுவேன்  என்பது பொய்யுரை, திருந்தி விட்டேன் என்பதுமெய்யுரை

Related Posts