அம்பாறை செய்திகள்

சுத்தத்தமிழனென்றால் தலைவர் வைத்த பெயரை இனிபயன்படுத்தக்கூடாது!

காரைதீவு நிருபர் சகா)

வடக்கு கிழக்கை ஆயுத ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உடைத்துப்பிரித்தவர் துரோகி கருணா. அவர் சுத்தமான தமிழன் என்றால் தேசியத்தலைவர் வைத்த கருணா என்ற பெயரை இனிப்பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட சகலவேட்பாளர்களும் கலந்துகொண்ட மூன்றாவது பொதுப்பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய இலங்கைத்தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்டப்பேச்சாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முழக்கமிட்டார்.

நேற்றிரவு ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் த.அ.கட்சி செயற்பாட்டாளர் கே.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இலங்கைதமிழரசுக்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார்.

கூட்டத்தில் திகாமடுல்ல வேட்பாளர்களான அரசரெத்தினம் தமிழ்நேசன் இராமகிருஸ்ணன் சயனொளிபவன் கவீந்திரன்கோடீஸ்வரன் தவராசா கலையரசன் தாமோதரம் பிரதீபன் சின்னையா ஜெயராணி சீனித்தம்பி சுந்தரலிங்கம் செல்வராசா கணேசானந்தம் ஆகியோரும் தவிசாளர்களான ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ்வரன் கொள்கைபரப்புச்செயலாளர் சாந்தன் ஆகியோரும் மேடையில் வீற்றிருந்தனர்.

அங்கு காரைதீவு தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையுரையாற்றுகையில்:
உலகவரலாற்றில் இப்படியொரு துரோகத்தை மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த துரோகியை தமிழ்மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.அவர் கடத்திய பெண்களின் கொன்ற சகபோராளிகளின் குடும்பத்திற்க என்ன பதில் சொல்லப்போகிறார்? என்ன பிராயச்சித்தம் செய்வார்?

இனியபாரதிஇனிப்பாகப்பேசி கசப்பான விதையான நுண்கடனை விதைத்தவர். எத்தனையோ பெண்கள் இறக்கக்காரணமாயிருந்தார். அதைவிட துரோகத்தனம் கருணா செய்தது.
தமிழிழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்து தமிழர்களின் ஒற்றுமையைச்சிதைத்த இன்று மாற்றானுக்கு விலைபோயிருக்கிறார்.
தலைவரின் கொள்கையில் தடம்புரளாமல் சென்றுகொண்டிருப்பது த.தே.கூட்டமைப்பு என்றால் அது மிகைப்பட்டதல்ல.

அதாவுல்லாவையும் ஹரீசையும் வைத்து நாடகம் ஆடுகின்றார். அம்பாறையிலிருந்து கருணாவால் கடத்தப்பட்ட முதல் பெண் பூங்கோதை இன்று புலம்பெயர் நாட்டிலிருக்கிறார். அவர் வாய்திற்நதால் கருணாவின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் சத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்கிறது. பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு பகட்டுக்கு சபாரி ர்pசெர்ட் என்று ஒருவித மாயையைக்காட்டுகிறார்கள். அவற்றைப்பார்க்க எமது இளைஞர்கள் செல்கிறார்கள்.

த.தே.கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கபட்ட கட்சி. அக்கட்சியில் ஒரு எம்.பி. அல்லது மாகாணசபை உறுப்பினர் அல்லது தவிசாளர் உறுப்பினர் பிழைவிட்டால் அல்லது வெறுப்பிருந்தால் அவர்களை நிராகரித்துவிட்டு கட்சிக்கு வாக்களியுங்கள்.இது தலைவர் உருவாக்கிய வீடு.யாராலும் அழிக்கமுடியாது. என்றார்.

Related Posts