செய்திகள் முக்கிய செய்திகள்

மாணவர் சமூகம் கரம்கூப்பி விடுக்கும் வேண்டுகோள்! துரோக கும்பலை விரட்டியடிங்கள்

அன்புக்குரிய உறவுகளுக்கு !

ஒரு சனநாயக நாடெனப்படும் இலங்கை தேசத்தில் இடம்பெறுகின்ற பதினைந்தாவது நாடாளுமன்றத்தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது ?  எதிர்வரும் ஆவணி மாதம் 05 ஆம் நாள் 2020 அன்று இலங்கையின்பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது .

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து களமிறங்குவதாக தங்களை அடையாளப்படுத்துகின்ற தமிழர்அரசியற் கட்சிகளில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும்

என்னும் தெளிவான நிலையொன்றிற்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறோம் . எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் பிரகடனப்படுத்தப்படுகின்  எந்தத் தேர்தலிலும் எம் சமூகத்தின்அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதாகவே அல்லது வடக்கு , கிழக்கு மக்களின் உரிமைகளைப்பெற்றுத்தரக்கூடியதாகவே அமையவில்லை என்பதே உண்மை . இதற்குப் பல காரணங்கள் உண்டு , இலங்கையில் 1981 இல் இருந்து 2011 வரையான கடந்த 30 வருடகால சனத்தொகை வளர்ச்சிப் போக்கைஅவதானிக்கும் போது சிங்கள மக்களின் மேலதிக சனத்தொகை  வளர்ச்சி 42 இலட்சத்து 70 ஆயிரத்து 520 ஆகக் காணப்பட , அதாவது விழுக்காடாக அமைய இஸ்லாமியர்களின் சனத்தொகை வளர்ச்சியானதுஇலட்சத்து 45 ஆயிரத்து 712 பேராகவும் அதாவது 81 விழுக்காடாகவும் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது . ஆனால் கடந்த 30 வருடங்களில் 18 இலட்சத்த 86 ஆயிரத்து 872 ஆக இருந்த சனத்தொகை சரியாக 50 விழுக்காட்டிலும் குறைவா குறைந்து கொண்டு செல்கின்றது . இவ்வாறான நிலைமை தொடருமாயின் இருப்பைதக்கவைத்துக் கொள்ள முடியாது . நம்முடைய இருப்பை பாதுகாக்க தவறின் எம் நிலத்தைப் பாதுகாக்கமுடியாமலும் போகும் . நிலத்தைப் பாதுகாக் முடியாதவிடத்து எமது உரிமைகளையும் பாதுகாக்க முடியாதுஉண்மையாகும் . எனவேதான் எமது இனத்தையும் , நிலத்தையும் காப்பதற்பு சரியானதும் , உண்மையானதுமானபாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யவேண்டிய தலையாய கடமை எம் அனைவருக்கும் உண்டு .

தமிழ்த் தேசியத்திற்கு எதிர்த்திசையில் நின்று , தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும்கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை கொன்றொழித்தவர்களை முற்றாக நாம் நிராகரிக்க வேண்டும்என்பதே எமது குறிக்கோளாக அமைந்துள்ளது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அம்பாறை , திருகோணமலை , மட்டக்களப்பு ஆகிய 3 மாவட்டங்களிலும் உள்ள உறவுகள் அனைவரும் , உங்கள்வாக்குக்கலை பெறுமதியானவையாகக் கருத்திற்கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம் . அம்பாறை தேர்தல் களத்தில் வாக்களிக்க இருக்கும் எம் அன்புக்குரிய உறவுகளிடம் நாம் வேண்டி நிற்பதுஎன்னவெனில் தமிழ்த்தேசியக் கட்சிகளில் ஏற்கனவே தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீது உங்களுக்குவெறுப்புநிலை ஏற்பட்டிருப்பின் அவர்களையும் நிராகரித்து தேசிய கொள்கையுடன் செயற்படும் புதியவேட்பாளர்களைத் தெரிவு செய்யும் உரிமை எம் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்தவிரும்புகின்றோம் . அதேபோன்று மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் உள்ளஉறவுகள் இதனைக் கருத்திற்கொண்டு செயற்படுதல் மிகவும் நன்று என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம் . மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்து துரோகங்களினாலும் , பழிவாங்கல்களினாலும்தினமும் அல்லல்பட்டுக்கொண்டு கிடக்கின்ற நாம் இம்முறை இவையனைத்தினையும்உடைத்தெறிந்துபயணிக்க வேண்டும் .

225 மொத்த ஆசனங்களில் 22 ஆசனங்களைப் பெறும் தழிழர் அரசியல் தலைமைகள் அதனை வைத்துக்கொண்டு எந்த வகையிலும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவோ , அல்லது பேரம் பேசுதலில் ஈடுபடவோ ஒருபோதும் நடைமுறைச் சாத்தியம் அற்றது என்பது வெளிப்படையான உண்மையாகும் . ஆனால் இவ்வாறானதேர்தல்களை சர்வதேச அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் , எமது மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகளுக்காகவும் , அழிந்து கொண்டிருக்கும் எம் இனத்தின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளவும் , பயன்படுத்திக் கொள்ள முடியும் . அதற்காகவேனும் நாம் ஒவ்வொருவரும் வாக்குச் சாவடிக்கு சென்றுவாக்களிக்கும் மனநிலைக்கு முன்வர வேண்டும் என்பது மாணவர் சமூகமாகிய எமது வேண்டுகோளாகும் . அதேநேரத்தில் வடக்கில் உள்ள அரசியல் நிலை வேறு . கிழக்கில் உள்ள அரசியல் நிலை வேறு . இதனை நாம் நன்குபுரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும் . அதிலும் திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாறை ஆகியஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாடாளுமன்றத் தேர்தல் தேர்தல் தொடர்பாக பல ஒட்டுக்குழுக்கள் இணைந்துஎமது வாக்குகளைப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன . எனவே கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாகியநாம் உங்களிடம் கரம்கூப்பி நிற்பது எமது சமூகத்தின் ஒற்றுமையினையே ஆகும் . இதனைக் கருத்திற்கொண்டு எமது வாக்குகளை சிதறவிடாமல் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் தலைமைகளைத் தெரிவுசெய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது . அந்த வகையில் , .

*தமிழ் தேசியக் கோட்பாடுகளில் சித்தாந்த ரீதியாகவும் , செயற்பாட்டு ரீதியாகவும் தன்னை முழுமையாகஅரிப்பணித்துச் செயற்படுதல் ,

*எமது சமூகம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என நினைக்கும் காணி அபகரிப்பு , மனித உரிமை மீறல்கள் , ஆட்கடத்தல்கள் மற்றும் கைதுகள் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குஎதிராகப் போராடும் எமக்கு துணையாக நிற்றல் .

*இலங்கையிலும் , புலத்திலும் உள்ள பொது மக்கள் , கட்டமைப்புக்கள் , புத்தி ஜீவிகள் , மதகுருமார்கள்அனைவரையும் ஒன்று திரட்டி தமிழ் மக்களின் மனநிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறாக எமக்கானதீர்வுத் திட்டங்களை முன்வைத்தல் .

*கிடைக்கப்பெறும் ஆசனங்களைப் பயன்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தினைதுரிதகதியில் மேம்படுத்துவதற்கான சரியான திட்டங்களை வகுத்துச் செயற்படல் .

மேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத்திலும் தம்மை உளமாற ஈடுபடுத்திக் கொள்ளும் வேட்பாளர்கள் எவரோஅவர்களுக்கு நாம் எமது பூரண ஆதரவை நல்குவதுடன் அவர்களின் வெற்றிக்காகவும் எம்மாலானவற்றைச்செய்வோம் எனத் தெரிவித்துக் கொள்வோம் .

நன்றி .

Related Posts