செய்திகள் புலனாய்வுச் செய்திகள் முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுனராக மீண்டும் ஹிஸ்புல்லா?

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ஹிஸ்புல்லா தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் தனது வெற்றியை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட வியாழேந்திரன் அவர்களுக்கு விட்டு கொடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு பிரதி உபகாரமாக கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை மீண்டும் ஹிஸ்புல்லாவிற்கு பெற்று தர மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இணங்கி உள்ளதாக தெரிகிறது.

இதற்கான கோரிக்கையை தற்போது ஹிஸ்புல்லா தரப்பு ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

ஏற்கனவே தான் வெற்றி பெற்றதாக தனது ஆதரவாளர்களிடம் அறிவித்த ஹிஸ்புல்லா அவர்கள் கொழும்பில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு பின்னர் வியாழேந்திரனை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் தான் தோல்வி அடைந்ததாகவும் வியாழேந்திரனே வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தார்.

இன்நிலையில் ஹிஸ்புல்லா அவர்களுக்கு ஏற்கனவே அவர் வகித்த கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்குவதற்கு பொது ஜன பெறமுன கட்சி இணக்கம் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையிலேயே ஹிஸ்புல்லா அவர்கள் தனது வெற்றியை மொட்டு கட்சிக்கு விட்டுக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் படி கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விரைவில் ஹிஸ்புல்லாவிற்கு வழங்கப்பட உள்ளதாக காத்தான்குடி முஸ்லீம்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts