செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த கண்ணோட்டம் !

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பெருவாரியாக வெற்றி பெற்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2020 பொதுத்தேர்தலில் கடும் பின்னடைவைக் கண்டது எதேச்சையாக ஏற்பட்ட சம்பவம் அல்ல. போராட்டம் மௌணிக்கப்பட்டபின் போலித்தேசியவாதிகளின் கைகளில் இக்கட்சி சிக்கித்தவித்ததே காரணம்.
குறிப்பாக, கட்சியின் பொது செயலாளர் இத்தோல்விக்கு பெரும் பங்கை ஆற்றியிருக்கிறார். தான் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என்ற குறுகிய சிந்தனையோடு புதியவர்களையும் இளையவர்களையும் கட்சிக்குள் உள்வாங்காமல், தனது இருப்புக்கு சவாலாக வரமாட்டார்கள் அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் மட்டும் இருப்பார்கள் என தனது குறுகிய வட்ட ஆலோசகர்களின் ஆலோசனைப்படியே செயற்பட்டாரே ஒழிய கட்சியின் வளர்ச்சி குறித்து சிறிதளவேனும் கருசனையற்றவராகவே செயற்பட்டார்.
தனது இயலாமைகள், குறைகள் பற்றி ஏற்றுக்கொள்ளாது மிதமிஞ்சிய நம்பிக்கையுடையவராக காணப்பட்டார். இதற்கு நல்ல உதாரணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை குறைவாக எடைபோட்டமை. மாகாண சபை முடிவின் பின் த.ம.வி.பு கட்சி பிரமுகர்கள் கூட்டமைப்பின் செயலாளரை சந்திக்க அனுமதி கேட்டபோது உங்களது விண்ணப்பத்தினை எழுதி கூட்டமைப்பின் அலுவலக கதவின் கீழ் வைத்து விட்டு போகும்படி கூறியமை. இன்று த.ம.வி.புலிகள் கட்சி வெறும் பன்னிரெண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதுமன்றி அடுத்த முறை துறைராஜசிங்கம் போன்றோர் கட்சியில் அங்கத்தவராய் இருந்தால் கூட முழு மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று த.ம.வி.பு வெற்றி பெறுவது உறுதியாகும். தேவையேற்படின் இதனை இன்றே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இத்தேர்தலின் பின்பே தமிழ் கூட்டமைப்புக்கு செயலாளர் ஒருவர் மட்டக்களப்பில் இருக்கிறார் என்பதை ஐம்பது வயதிற்கும் குறைவான இளந் தலைமுறையினர் அறிந்து கொண்டனர். இவரது ஒரு சில, மலிவு விலையில் அச்சடித்த துண்டுப்பிரதிகளை கண்டு. மக்களோடு எவ்விதத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத, தன்னை தலைமேல் தூக்கி வைப்பவர்களோடு மட்டுமே பழகுபவராக காணப்பட்டார். உதாரணத்திற்கு மூன்று சம்பவங்களைக் கூறலாம்.
கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதல் நடந்த நாள் முதற்கொண்டு ஒரு மரண வீட்டுக்குத் தானும் தன்னிச்சையாக சென்று மக்களின் துயரில் பங்கெடுக்காதவர். கிறிஸ்தவர்களை அடியோடு தள்ளி வைத்த இழிமட்ட செயற்பாடாகவே இதைப் பார்க்கலாம். கிறிஸ்தவ மக்களின் மனங்களை அதிகம் வேதனை அடையச்செய்த , வெறுப்பை சம்பாதித்த, தனது மதத்தை மட்டுமே மதிக்கின்ற சிந்தனை கொண்ட மதவாதியாகவே காணலாம்.
அவ்வாறே, கொரோனா காலத்தில் ஏனைய அரசியல் பிரமுகர்கள் மக்களுக்கு எதனைச் செய்யலாம் என சிந்தித்து செயற்பட்டவேளையில், காலையில் எழுந்து தனது துவிச்சக்கர வண்டியில் உடற்பயிற்சிக்காக சென்றவரே இந்தத் துறைராஜசிங்கம். தனது கட்சியை ஒழுங்கு படுத்தி, ஒருங்கிணைத்து கொரோனா காலத்தில் மக்களுக்காக செயற்பட்டிருந்தால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் தேர்தல் காலத்தில் அதனை நினைவுகூர்ந் திருந்திருப்பார்கள். ஏனைய இளம் வேட்பாளர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள முடியாத ஒரு “ஜென்மம்” என்று கூட கூறலாம்.
தனது பிள்ளைகளை தனியார் வகுப்புக்கு கூட்டிப்போவதையும் தனது வீட்டு வேலைகளை முதன்மைப்படுத்தியதையுமே சாதனையாக நினைத்தவரே இப்பெரும் தேசிய கட்சியின் பொது செயலாளர். தனது பிள்ளைகளை தனியார் வகுப்புக்கு கூட்டிச்சென்று உதவிய தம்பி தங்கவடிவேலை பாராளுமன்ற உறுப்பினராக்குவதில் தப்பேதும் இல்லை தானே?
இவருடைய சக அரசியல் வேட்பாளர்களைக் கூட அரவணைக்கத்தெரியாத தலைமைத்துவ பண்புகள் கொஞ்சமும் இல்லாதவரே மட்டூர் சிங்கம் என தனக்கு தானே பெயர் வைத்துக்கொண்டவரே துறைராஜசிங்கம். அருட்தந்தை ஜோசப் மேரி, அல்போன்ஸ் மேரி தொடக்கம் பொன் செல்வராசா முதல் அரியநேந்திரன் உட்பட கட்சிக்காய் பாடுபட்ட யாரையுமே விட்டு வைக்காமல் விரட்டி விரட்டி அடித்த பெருமை துறைராஜசிங்கம் எனும் அடிமட்ட சிந்தனையாளரையே சாரும்.
வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணிக்கென தலைவர் ஒருவர் கட்சியின் மத்திய குழுவினால் நியமிக்கப்பட்டிருக்க, அத்தலைவரின் அனுமதியோ அறிவிப்புமின்றி வாலிபர் முன்னணியை முன்னின்று பிரித்தாடி தனது சொந்தத்தேவைகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் செயற்பாடற்ற அமைப்பாக மாற்றியது கனம் துறைராஜசிங்கத்தையே சாரும்!
ஒரு இலட்சம் வாக்காளர்கள் வாழுகின்ற மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியாத, அரசியல் செயற்பாடற்ற மாவட்டமாக மாற்றிய பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் செயற்திறனற்ற துறைராஜசிங்கத்தையையுமே சாரும்!
கட்சியின் கொள்கைகள், வரலாறு, அரசியல் விழுமியங்கள் போன்றவற்றை இளந் தலைமுறையினரிடம் கொண்டு போகாத, கிழக்கில் தழிழ் தேசியத்தை கிழித்தெறிந்த, கட்சிக்கு சாவு மணியடிக்க முயற்சித்து வெற்றியும் கண்டவனே இந்த துறைராஜசிங்கம்.
கடந்த முறை உள்ளூராட்தித் தேர்தலில் தனது சொந்தக்கிராமத்திலேயே தனது கட்சியை தோல்விக்கு வழிநடாத்திய துறைராஜசிங்கத்தை ஒட்டு மொத்த மாவட்டத்தின் பிரதம வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியது யாருடைய தவறு?
தனது செயற்பாடற்ற தலைமைத்துவத்தை மறைக்கவே புதியவர்களையும், திறமையுள்ளவர்களையும் கல்வியாளர்களையும் உள்வாங்காது தடுத்தவனே துறைராஜசிங்கம்.

விடியாத முகமும், ஆதரவாளர்களை அரவணைக்கத்தெரியாத குறுகிய சிந்தனையோடு கட்சியை இவ்வளவும் சிதைத்த துறைராஜசிங்கத்தை உடனடியாக கட்சியை விட்டு அப்புறப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்காலத்தை கட்டூவீர்கள் என கட்சியின் அடிமட்டத்தொண்டனாக கேட்டு நிற்கிறேன். இம்முறை இம்மாவட்ட மக்களின் ஆணையை மதித்து உடனடியாக துறைராஜசிங்கத்தையும் அவனது மாபியாவுக்குள் செயற்படும் அனைத்து எடுபிடிகளையும் நீங்கள் அப்புறப்படுத்தாத பட்சத்தில் இதே மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓரங்கட்டுகின்ற பல கட்சிகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்ததை இம்மக்களுக்கு அனுமதிக்காதீர்கள்.
இது ஒருவனின் குரல் அல்ல. ஒட்டு மொத்த கிழக்குத் தமிழனின் குரல்!
இக்குரலுக்கு நீங்கள் செவி சாய்க்காவிட்டால் எதிர்வரும் எந்த தேர்தலுக்கும் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலுக்கும் முகங்கொடுப்பதை தவிர்ப்பது சாலச்சிறந்ததாக கருதப்படும்.
தமிழ் தேசியத்தின் பால் உள்ள வைராக்கியத்தில் இதனை எழுதுகிறேன்-

தொண்டன்

Related Posts