செய்திகள்

தபால் சேவை ஊழியர்களினதும், ஊடகவியலாளர்களதும் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் !

தபால் சேவை ஊழியர்களினதும், ஊடகவியலாளர்களதும் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள், ஊடக அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மாவட்ட ரீதியான வேலைதிட்டமொன்றை மேற்கொள்ள, அமைச்சருடன் கலந்துரையாடி, அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related Posts