செய்திகள் புலனாய்வுச் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பிரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு! பின்ணியில் இந்தியா ரோ

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மாத்தையாவுடன் ஒப்பிட்டுள்ளார் அந்த கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர்.

நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ள கட்சித் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் கொழும்பிற்கு புறப்படுவதற்கு முன்னதாக நடந்த கலந்துரையாடல் ஒன்றில், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் குழுவொன்றிடம் இதனை தெரிவித்துள்ளார் அந்த பிரமுகர்.

வி.மணிவண்ணன் இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் ஆள், கட்சியை உடைக்க மணிவண்ணனை இந்தியா பயன்படுத்தலாம் என்ற மனப்பிராந்தியிலிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களிற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை குடும்ப கட்சியாக வைத்திருக்காமல் பதிவு செய்யும்படி மணிவண்ணன் வலியுறுத்தியது அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

மணிவணணனிற்கு நேரடியாக இந்தியா தொலைபேசியில் பேசித்தான் இந்த கோரிக்கையை வைப்பதாக நினைத்த முன்னணி, அவரை நிரந்தரமாகவே கட்சியை விட்டு நீக்க முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக அவரது தேசிய அமைப்பாளர் பதவியை பறித்துள்ளனர்.

இந்த நிலையில், முன்னணிக்கு ஏற்பட்டுள்ள தவறான மனப்பிராந்தியை நீக்கி, கட்சியின் உடைவை சரி செய்ய யாழ்ப்பாணத்திலுள்ள இளம் சட்டத்தரணிகள் குழுவொன்று முயற்சியெடுத்தது. அவர்கள் முன்னணியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி, சமரசத்திற்கு முயற்சித்தார்கள். இந்த கட்சியை உருவாக்கியவர்களில் மணிவண்ணனும் ஒருவர், அதற்கான மதிப்பை கொடுக்க வேண்டும், குடும்ப கட்சியாக நீங்கள் மாற்றுகிறீர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போதே, முன்னணியின் இரண்டாம் நிலை தலைவர் ஒருவர் இந்த குபீர் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“நீங்கள் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். இந்திய வல்லாதிக்கம் இந்த பிராந்தியத்தில் ஒரு விடுதலை அமைப்பையும் தன்னெழுச்சியானதாகவும், சுயாதீனமானதாகவும் இருக்க விடாது. விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் மாத்தயா மூலம் சதி செய்தார்கள். அதை புலிகள் முறியடித்தார்கள். மாத்தையா புலிகளை உருவாக்கினார் என பார்த்து தலைவர் அவரை மன்னிக்க முயன்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? போராட்டம் எப்போதோ அழிந்திருக்கும். மணிண்ணன் விசயத்தையும் நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். மாத்தையாவை போல மணிவண்ணனையும் இந்தியா கையாள்கிறது“ என குறிப்பிட்டுள்ளார்.

சமரசத்திற்கு சென்ற சட்டத்தரணிகளிற்கு தலைசுற்ற ஆரம்பித்து, இந்த முயற்சியே வேண்டாம் என ஒதுங்கி விட்டதாக தகவல்.

Related Posts