செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் தமிழர்களுக்கு மட்டும் மறுக்கப்படும் உரிமை?

சட்டத்தின் முன் அனைவரும் சமன் சட்டவாட்சி ?

1982 ஆம் ஆண்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டசெல்வராசா யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி தமிழர் விடுதலைக் கூட்டணியினால் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டார்.

அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணையாளர் வர்த்தமானியில் அறிவித்தார். சபாநாயகருக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் அது அனுப்பப்பட்டது. இருந்தும் அப்போதைய சபாநாயகர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.

குறிப்பாக #அரசியலமைப்பின் 89 மற்றும் 91 சரத்துகளுக்கமைய அந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2020 இல் சில தினங்களுக்கு முன்னர் அரசியலமைப்பின் மேற்குறித்த சரத்துகளை மீறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இங்கே இலங்கையில் உள்ள சகல இனங்களுக்கும் பொதுவான அரசியல் சாசனம் ஓர் இனத்துக்கு மாத்திரம் நெகிழ்வடையக் கூடியதாக இருந்து வருகின்றதா?

Related Posts