செய்திகள்

மட்டக்களப்பு புதூரில் துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு புதூர் பிரதேச்திலுள்ள மீனவர் சங்க கட்டிட பகுதியில் கைவிடப்பட்டிருந்த உள்ளூதயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் .

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜி,எஸ். கயபிரித்த தலைமையில் சப் இன்பெக்ஸடர் ஆர்.என். பிரேமகுமார, பொலிஸ் சாஜன்ட் அதிகாரி, திஸநாயக்கா, லசந்திர, பெரேரா, சம்பத் ஆகிய விசேட அதிரடிப்படையின் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலின் போது உள்ளூர்தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டனர்

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts