செய்திகள்

மட்டக்களப்பில் தமிழ் இளைஞன் மாயம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த விக்கி என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை விக்னேஸ்வரன் என்னும் இளைஞனை கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காணவில்லையென பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
விசேட தேவையுடைய இளைஞராக இவர் இருந்த போதிலும் சமூக சேவையில் அதிக நாட்டமுடையவராக காணப்பட்டவரே கடந்த சில நாட்களாக காணாமற் போயுள்ளார்.

குறித்த நபர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது உறவினர்களின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு 077 311 7808 அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

அதே வேளை காணாமல் போயுள்ள குறித்த நபரின் சகோதரர் மடடக்களப்பிலுள்ள தொன்மைவாய்ந்த ஆலயமொன்றின் திருவிழாவின் போது கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts