செய்திகள்

களுவாஞ்சிகுடியில் பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய பொதுக்கூட்டம்

பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய பொதுக்கூட்டமானது இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய தலைவர் க.துரைராஜா தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் உப பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் கலந்து கொண்டார் சிறப்பு அதிதியாக அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கணக்காளர் ம.வினோத் மற்றும் மட்டக்களப்பு பகிரங்க சேவை ஓய்வூதிய நிதியை தலைவர் சின்னத்தம்பிபோடி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் உபசெயலாளரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான த.ஜயந்திராவின் வரவேற்புரையுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.

இதன்போது ஓய்வூதிய சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Related Posts