செய்திகள் முக்கிய செய்திகள்

கூட்டமைப்பில் சுமந்திரன் களமிறக்கிய நளினி யார்? அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்!!

த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்டுள்ள நளினி இரட்ணராஜா என்ற பெண்மணி பற்றிய பல அதிர்ச்சிகரமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி பிரமுகர்களின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு காரணமாக வேட்பாளர்பட்டியலில் இடம்பிடித்துள்ள நளினி இரட்ணராஜாவின் தனிநபர் ஒழுக்கம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளிவரும் கண்டணங்கள் பற்றி நாம் இங்கு பேச விரும்பவில்லை.

ஆனால் இந்த நளினி ரெட்ணராஜா என்பவர் யார் என்று வெளியாகி வருகின்ற கருத்துக்கள், ஆதாரங்கள், சுமந்திரன் யார், சுமந்திரனின் உண்மையான நோக்கம் என்ன என்கின்ற கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கின்றது.

த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் சுமந்திரனால் வலிந்து களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நளினி இரெட்ணராஜா என்ற பெண் 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை கட்சி வேட்பாளராக மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்ததைத் தொடர்ந்து, தமிழர்களின் அரசியல் பலத்தையும், பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மகிந்த ஆட்சி மேற்கொண்டீருந்த காலகட்டத்தில், மட்டக்களப்பில் மாத்திரம் 28 சுயேட்சைக்குழுக்களை களமிறக்கியிருந்தது மகித்த ஆட்சி. அந்த 28 சுயேட்சைக் குழுக்களில் 16வது சுயேட்சைக் குழுவில் களமிறங்கியிருந்தார் இந்த நளினி.

கருணாவின் முதல் மனைவியான நீராவின் நெருங்கிய உறவினரான நளினி கருணாவினாலேயே அந்த நேரத்தில் கறமிறக்கப்பட்டிருந்ததாகப் பேச்சடிபட்டது. (கருணா அந்தக் காலகட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக பதவி வகித்துவந்தார்)

அந்த 16வது சுயேட்சைக் குழுவில் இரண்டு தமிழர்களும், 6 முஸ்லிம்களும் களமிறக்கப்பட்டிருந்தார்கள்.

நளினியுடன் இரண்டாவதாக களமிறக்கப்பட்டிருந்தவர் யார் தெரியுமா? வர்ணகுலசிங்கம் கமலதாஸ்.

இந்த வரணகுலசிங்கம் கமலதாஸ் என்பவர்தான் கருணா தற்பொழுது கிழக்கில் உருவாக்கியுள்ள புதிய அரசியல்கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர். இவர்களது சுயேட்சைக் குழுவில் களமிறங்கியிருந்த மற்றய வேட்பாளர்கள் : அஸ்மட் சிராஜ் அஹமட் மொஹைதீன், இப்ராஹீம் சமீது லெப்பை, ஜவுபர்கான தம்பி லெப்பை, பதூர்தீன் இஸ்மாயில், சலீம் அப்துல் சலாம், சீனி மொஹமட் ஹம்ஸா.

(இந்த சுயேட்சைக் குழுவில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் சஹ்ரான் சர்சையில் சிக்கியவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)
இந்த சுயேட்சைக்கு குழு வேட்பாளர்கள் அனைவரும் மட்டக்களப்பின் அத்தனை பிரதேசங்களிலும் ஓடி ஆடி பிரச்சாரம் செய்து த.தே.கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கும் காரியத்தில் ஈடுபட்டார்கள்.

ஆனால் இந்த சுயேட்சைக் குழுவுக்கு மட்டக்களப்பு தேர்தல்தொகுதியில் 191 வாக்குகளும், கல்குடா தேர்தல்தெகுதியில் 22 வாக்குகளும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 46 வாக்குகளும் மாத்திரமே கிடைத்தன. 8 வேட்பாளர்களுடன் இணைந்து போட்டியிட்ட நளினியின் இந்த சுயேட்சைக் குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாகப் பெற்ற வாக்குகள் 259 மாத்திரம் தான்.

அப்படியானால் நளினி சராசரியாக 40 வாக்குகளை மாத்திரமே மட்டக்கபப்பில் பெற்ற ஒரு பிரமுகர் என்பது நோக்கத்தக்கது.

இப்படிப்பட்ட நளினி சுமந்திரனால் மறுபடியும் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டுள்ளதானது த.தே.கூட்டமைப்பினர் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றது..

வெறும் 40 இற்கும் குறைவான வாக்கு வீதத்தை மாத்திரமே பற்றிருந்த, மட்டக்களப்பில் எந்தவித செல்வாக்கும் அற்ற நளினியை எதற்காக சுமந்திரன் தற்பொழுது த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் வலிந்து திணித்துள்ளார்?
அதுவும் கிழக்கு பிரமுகர்களின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி எதற்காக இந்த நளினியை சுமந்திரன் முன்நிறுத்த வேண்டும்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்ற நோக்கம் சுமந்திரனுக்கு இருக்கின்றதா?
கருணாவின் நெருங்கிய உறவினரும், கருணாவால் கூட்டமைப்பை உடைக்கக் களமிறக்கப்பட்டவருமான இந்தப் பெண்ணை த.தேசியக் கூட்டமைப்பில் களமிறக்கியது ஏன்?

கிழக்கு தொண்டர்களின், உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு வடக்கு தலைமைகள் மதிப்பளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இலைமறை காயாக தமிழ் தேசிய அரசியல் அரங்கில் தொடர்ந்து இருந்து வருகின்ற நிலையில், கிழக்கு மக்களின் விருப்பம் நிலைப்பாடுகளை புறந்தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாக இந்த குறிப்பிட்ட நபரை வேட்பாளர் பட்டியலில் இணைத்தது எதற்காக?
தமிழ் தேசியத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் விரோதமாக தொடர்ந்து நிலைப்பாடு எடுத்து வந்த நளினியை திடீரென்று த.தே.கூட்டமைப்பில் உள்வாங்குவதற்கு ஏதாவது பிரத்தியோக காரணம் இருக்கின்றதா?

Related Posts