செய்திகள் முக்கிய செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமை அலுவலகம் சென்று தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.
அங்கு சென்ற மகளிர் அணியினர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள்அம்பிகா சற்குணநாதனை எமக்கு தெரியாது யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ அறிமுகமற்றவர்களை எதற்காக வேட்பாளராக்க வேண்டும், பெண் வேட்பாளர்கள் இருவரும் இதுவரை கட்சி அங்கத்துவத்தையே பெற்றிருக்கவில்லை, தமிழ் மக்களின் போராட்டங்களில் பங்கபற்றினாரா அல்லது எமக்காக இதுவரை குரல்கொடுத்தாரா என பல கேள்விகளை எழுப்பினர்.

இதுவேளை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்குபிரதேசங்களில் காணாமல்போன உறவினர்கள் போராட்டம் நடாத்தியவேளை சுமந்திரன் தனது வேட்பாளர்களை மகளிருக்கு அறிமுகப்படுத்தும் முகமாக மகளிர்தின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்.

Related Posts