செய்திகள் புலனாய்வுச் செய்திகள்

மனைவியா? தம்பியா? கட்சியா? மட்டக்களப்பில் துரைராசசிங்கத்துக்கு ஏற்பட்ட திரிசங்குநிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் நியமனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் திடீரென தனது சகோதரன் தங்கவேலை களமிறக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதால் இப்பொழுது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சியின் வேட்புமனு குழுவின் கூட்டத்திலும் இதனால் குழப்பங்கள் நிகழ்ந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞா.சிறிநேசன், மா.உதயகுமார், நளினி ரட்ணராஜா, சாணக்கியன் ஆகியோர் வேட்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்  எஞ்சிய ஒரு இடத்தில் கீ.துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேலா அல்லது சுமந்திரனால் இறக்கப்பட்ட ஆருயுர் தோழி நளினிரட்ணராஜாவா என்பதில் குழப்பம் நீடித்து வருகின்றது.
சில நாட்களின் முன்னர்வரை, தானும் களமிறங்கப் போவதாக கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்து வந்தார் எனினும், திடீரென அதிலிருந்து பின்வாங்கி, தனது தம்பியை களமிறக்க துரைராசசிங்கம் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கி.துரைராசசிங்கம் தேர்தலில் போட்டியிடத்தான் விரும்பியபோதும், வைத்தியராக பணியாற்றும் அவரது ஆசை மனைவி அதை விரும்பவில்லை உமக்கு எம் பியும் வேண்டாம் பதவியும் வேண்டாம் என அவரால் கூறப்பட்டுவிட்டது. அவரது விருப்பத்தை மீறி துரைராசசிங்கம் போட்டியிட்டால், அவர் வீட்டை விட்டு அவரின் சொந்த ஊரான யாழ்பாணத்துக்கு சென்றுவிடுவார் என்ற பயத்தில் அவர் போட்டியிடவில்லையெனவும் அவரது ஆதரவாளர்க?ள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 2010ஆம் ஆண்டிலும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் துரைராசசிங்கம் களமிறங்க திட்டமிட்டிருந்தார். அப்போதும், அவரது மனைவி அதை எதிர்த்தார். மனைவியின் விருப்பத்தை மீறி, போட்டியிட தயாரானபோது, பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு, அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டதாகவும் அவரை காணாமல் திண்டாடிய துரைராசசிங்கம், அடுத்த பஸ்ஸேறி யாழ்ப்பாணம் சென்று அவரை சமரசப்படுத்தி, மீண்டும் அழைத்து வந்ததுடன், தேர்தலில் இருந்தும் விலகிக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதனால்தான் யோகேஷ்வரன் அப்போது வேட்பாளராக நியமிக்கப்பட்டதாக அவரின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர்.

இதன் காரணமாக மனைவியின் சொல்லை கேளாமல் தேர்தலில் குதித்து மீண்டும் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்க அவர் விரும்பவில்லை எனவும் எனினும், தேர்தலில் போட்டியிடுவதென அவர் ஏற்கனவே கட்சிக்கு சொல்லி, ஒரு இடத்தை புக் செய்து வைத்திருந்தார். அந்த இடத்தை “வீணாக்க“ விரும்பாமல், கட்சிக்குள்ளேயே பாவிக்க முடிவெடுத்தே தம்பியை வேட்பாளராக்க முயற்சிக்கிறார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்பியை வேட்பாளராக்குவதாக அவர் தெரிவித்து விட்ட நிலையில், தற்போது ஏற்பட்ட குழப்பத்தால், அண்ணன் மீது தம்பியும் வருத்தமாக இருப்பதாகவும் தெரிகிறது.

தமிழரசுகட்சியில் வாரிசு அரசியலுக்கு வித்திட்ட முதல் மனிதர் மாவை சேனாதிராசாதான் அவரின் மகன் கலையமுதன் தமிழரசுகட்சியில் உள்ளேராட்சி சபை தேர்தலில் நிறுத்தப்படும்போது ஏன் எனது தம்பியை நான் நிறுத்தக்கூடாது என துரைராசசிங்கம் வாலிபர் முன்னணி தலைவர் சேயோனிடம் கேட்டதாகவும் அறிநமுடிகிறது.

துரைராசசிங்கம் கிழக்கு மாகாணசபை அமைச்சராக இருந்தபோது, தங்கவேல் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியிருந்தார். அதை தவிர வேறெந்த அரசியல் செயற்பாட்டிலும் அவர் ஈடுபட்டதில்லை.
அத்துடன் தன்னார்வ அமைப்பில் பணியாற்றியபோது, சர்ச்சைக்குரிய சம்பவமொன்றுடன் அவர் பணியிலிருந்து விலகினார்.
தங்கவேல் இந்த தேர்தலில் வெற்றியடைய மாட்டார் என்பது துரைராசசிங்கத்திற்கும், தங்கவேலிற்கும் நன்றாகவே தெரியும். எனினும், இந்த தேர்தலில் போட்டியிட்ட அறிமுகம், அடுத்த மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்ட உதவுமென அவர்கள் கருதுவதகவும் அவதனிகள் கூறுகின்றனர்.
யோகேஸ்வரன் சில விடயங்களை வெளிப்படையாக பேசுபவர். தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடு எடுப்பவர்கள் தமிழ் அரசு கட்சியிலிருந்து புறமொதுக்கப்பட்டு வருவது வரலாறு என்றும் அந்தப் பட்டியலில் இப்பொழுது சிக்கியிருப்பவர் யோகேஸ்வரன் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts