செய்திகள்

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தினால் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிப்பு

கடந்த ஆட்சியின் கம்பெரலிய திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு ஆலய அபிவிருத்திப் பணிக்கு ஒத்துழைப்பு வங்கியமை தொடர்பில் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (08) அருட்தந்தை சீ.வி.அண்ணதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் பேராலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், ஆலய உதவிப் பங்குத்தந்தை ஜுட் குயின்டஸ், அருட்சகோதரர் ஸ்டீபன் மற்றும் தேவாலய பங்கு மேற்புப்பணிச் சபைகளின் பிரதிநிதிகள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முனனாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன் ஆகியோரினால் ஆலய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக கம்பெரலய திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களினால் ஆலய மேற்கூரை திருத்தத்திற்காக ரூபா 01 மில்லியனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் ஆலய மதில் பூச்சுக்காக ரூபா 0.3 மில்லியனும் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Posts