செய்திகள் புலனாய்வுச் செய்திகள்

சுமந்திரனின் ஆருயிர் தோழி அதிரடி நீக்கம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார் . பொதுமக்களிடமிருந்தும் , சமூக ஊடகங்கள் வழியாகவும் வந்த விமர்சனங்களையடுத்து , கட்சி தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது . இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் புது இறக்குமதிகள் பல உள்வாங்கப்பட்டுள்ளனர் . யாழ்ப்பாணத்தில் அம்பிகா சற்குணநாதன் போன்றவர்கள் , கிழக்கில் நளினி ரட்ணராஜா போன்றவர்கள் . அம்பிகா பிரதேசரீதியான இறக்குமதியென்றால் , நளினி வகையறாக்கள் கருத்தியல் ரீதியான இறக்குமதிகளாக இருந்தனர் . தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ , தமிழ் தேசியத்தின் பாலோ செயற்பாட்டு பாரம்பரியத்தை அவர் கொண்டிருக்கவில்லை . கருணாவின் கட்சியின் தற்போதைய செயலாளருடன் இணைந்து , முஸ்லிம்களின் சுயேட்சைக்குழுவொன்றிலும் போட்டியிட்டிருந்தார் . அந்த சுயேட்சைக்குழு எந்த விதத்திலும் தமிழ் தேசியத்திற்கு நன்மையானதாக இருக்கவில்லை . ஆனால் , பெண் வேட்பாளர் தேவையென்ற கோசத்தின் கீழ் , பல இறக்குமதிகள் நடந்தன . கட்சிப் பிரமுகர் ஒருவர் அந்த நியமனங்களை அண்மையில் நியாயப்படுத்திய போது , நளினி , அம்பிகா போன்றவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஐ . நா காரரிடம் இருக்கும் . அவர்களை அவசரமாக தொடர்புகொள்ள இவர்களை எம் . பியாக்கலாமென வில்லங்க விளக்கம் சொல்லியிருந்தார் . நளினி ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை . அவரை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் குழுவொன்றே வெற்றிலை வைத்து அழைத்துள்ளது . தமிழ் அரசு கட்சியின் இரண்டாவது வேட்பாளர் நியமன குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது . இதற்கு முதல்நாள் மாலையில் , நளினிக்கு அறிவிக்கப்பட்டு , தொலைநகல் மூலம் செயலாளரிற்கு விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார் . இதற்கு சில நாட்களின் முன்னர் , வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் மட்டக்களப்பில் வேட்புமனுதாக்கல் செய்தவர்களிற்கான கூட்டம் நடைபெற்றிருந்தது . அதில் பெண் சட்டத்தரணி ஒருவர் மட்டும்தான் கலந்து கொண்டார் . அவர் ஒருவர்தான் அதுவரை விண்ணப்பித்திருந்த பெண் . நளினி காலஅவகாசம் முடிந்த பின்னர் விண்ணப்பித்திருந்தார் . அதையடுத்து , சமூக வலைத்தளங்களில் நளினிக்கு எதிரான கருத்துக்கள் வெளியாகின . நளினி கல்லடியை சேர்ந்தவர் . ஆனால் , அந்த பகுதியிலுள்ள பெரும்பாலானவர்களே அவர் தமது பிரதிநிதியாவதை விரும்பவில்லை . முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் – கட்சி செயலாளர் தவிர்ந்து அனைவரும் அவரது நியமனத்தை எதிர்த்தனர் . கட்சிப் பிரமுகர்களின் எதிர்ப்பும் , பொதுமக்களின் எதிர்ப்பும் சேர , சொந்தச் செலவில் சூனியம் வைக்க வேண்டாம் என்ற முடிவை தமிழ் அரசு கட்சி தலைமை மேற்கொண்டது . இப்பொழுது மட்டக்களப்பில் புதிய வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் . பிரபலமான பெண் சட்டத்தரணியொருவரும் மட்டக்களப்பில் விண்ணப்பித்துள்ளார் .

எனினும் , அவரை களமிறக்க கட்சித் தலைமையிலுள்ள ஒரு பகுதியினர் விரும்பவில்லையென தெரிகிறது . பெண்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனில் , அவரை களமிறக்கியிருக்க வேண்டும் . ஆனால் பெண்கள் சம உரிமை கோசங்கள் எல்லாம் வாக்கு சேகரிக்கும் உத்தியாக இருப்பதால் , அந்த பெண் சட்டத்தரணிக்கு இடம் வழங்கப்படவில்லை . பட்டிருப்பு தொகுதியை சேர்ந்த அந்த பெண் சட்டத்தரணி இணைக்கப்படாமல் , மஹிந்த முகாமிலிருந்து அண்மையில் கட்சி தாவிய சாணக்கியன் வேட்பாளராக்கப்பட்டுள்ளார் . பெண்களிற்கு சம உரிமை கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் . ஏ . சுமந்திரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார் . எனினும் , அந்த பெண் சட்டத்தரணியை தவிர்த்து , பட்டிருப்பு தொகுதியில் சாணக்கியனை வேட்பாளராக்கியதில் முக்கியமாக செயற்பட்டவரும் அவர்தான் . பெண்களிற்கு சம உரிமை கொடுக்க வேண்டுமென்ற சுமந்திரனின் கொள்கையை விட , சாணக்கியன் எந்த அடிப்படையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை சுமந்திரன்தான் தெளிவுபடுத்த வேண்டும் !

Related Posts